24 April 2020

அக்கினி ஊற்றை திறந்திடுமே

நிஜீ.கீதங்கள்:222

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

          அக்கினி ஊற்றை திறந்திடுமே

            பின்மாரி மழையை பொழிந்திடுமே

            தேவ நல் ஆவியை ஊற்றிடுமே

            இன்று எங்கள் சபைதனை நிரப்பிடுமே

 

                        பரலோக அக்கினி பலிபீட அக்கினி

                        பட்சிக்கும் அக்கினி பற்றிடும் அக்கினி

 

1.         எலியாவை நிரப்பின பரம அக்கினி

            பாகாலை வீழ்த்தின தேவ அக்கினி

            தாசர்களை நிறுத்திடும் சுத்த அக்கினி

            கறைகள் நீக்கும் தூய அக்கினி

 

2.         மணவாட்டி சபைதனை விழிக்கச் செய்து

            பூரண கற்புள்ள கன்னிகையாய்

            மணவாளன் வருகையை எதிர் நோக்கி

            நடத்திடுமே திருத்துவ அக்கினி

 

3.         ஜெபம் செய்யும் நேரத்தை இன்னும் கூட்டி

            உபவாச நாட்களை இன்னும் பெருக்கி

            கர்த்தரின் சித்தமதை நிறைவேற்றி

            மேலோக வாழ்வை காட்டும் தேவ அக்கினி

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...