24 April 2020

அக்கினி அக்கினி எழுப்புதல்

அக்கினி அக்கினி எழுப்புதல்

                    அக்கினி அக்கினி எழுப்புதல்

                        தந்திடும் அக்கினி (2)

                        அக்கினி அபிஷேகம் தேவா

                        இப்போ ஊற்றிடுமே (2)

 

1.         பெந்தெகொஸ்தே நாளில் இறங்கிய

            பரிசுத்த அக்கினி (2)

            இந்த வேளையிலே எங்கள்

            மீதே இறங்கட்டுமே (2) - அக்கினி

 

2.         மேல்வீட்டறையிலே நிரப்பிய

            பரலோக அக்கினி (2)

            இந்த வேளையிலே எங்கள்

            மீதே இறங்கட்டுமே (2) - அக்கினி

 

3.         உன்னத பெலத்தினாலே

            எம்மை இடைக்கட்டும் அக்கினி (2)

            எங்கள் தேசத்திலே பற்றிப்

            பிடித்து பரவட்டுமே (2) - அக்கினி


No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...