நாம் மோட்ச வின்பம் நாடிப்போவோம்
360.
இராகம்: போர்த்துக்கீஸ் ஆதி தாளம் (490)
பல்லவி
நாம் மோட்ச வின்பம்
நாடிப்போவோம், வாரும் அன்பரே; நல்
தூதர் சேனை சூழ்
மா ஸ்தலங் கிட்டிச் சேரும், இன்பரே
அனுபல்லவி
ஆ!
ஆ! சந்தோஷம்! மா கெம்பீரம் ஆம்
என்றென்றுமே-அன்
போடுமே துதி சாற்றுவோம் கிறிஸ்தருகே
நின்றுமே - நாம்
சரணங்கள்
1. பட்டணம்
பளிங்குக் கொப்ப தாய்த் துலங்குமே; அதில்
பரம
ஆட்டுக்குட்டி ரவிபோற்சுடர் பரவிலங்குமே-ஆ!
ஆ! - நாம்
2. சுத்தர்,
சுத்தர் சித்தரென்று தூதர் போற்றுவார்;-பின்னும்
துதி
கிறிஸ்துக்குரியதென்றும்பர் தொழுது ஏத்துவார்-ஆ!
ஆ! - நாம்
3. ஜீவ நதியோடும் இன்ப ஜீவக்கனியும்-திரு
ஜீவமுடியும் திவ்ய ஆடையும் தேடும்பாக்கியம்-நாம் ஆ! ஆ! - நாம்
4. மகத்து வாசனத்தின் மேல் கிறிஸ்து நாயனார்-அதி
மகிமையாக வீற்றிருந்து ஆளுவார், வல்லமைநேயனார்; ஆ! ஆ!
-
S.A.S.
Comments
Post a Comment