21 August 2024

நாதா உம் திருக்கரத்தில் இசைக் கருவி நான்

நாதா உம் திருக்கரத்தில் இசைக் கருவி நான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   நாதா உம் திருக்கரத்தில் இசைக் கருவி நான்

                        நாள்தோறும் பயன்படுத்தும் உந்தன் சித்தம் போல்

1.         ஐயா உம் பாதம் என் தஞ்சமே

            அனுதினம் ஓடி வந்தேன் - 2

            ஆனந்தமே அதிசயமே - (2) - நாதா

2.         எங்கே நான் போக உம் சித்தமோ

            அங்கே நான் சென்றிடுவேன் - 2

            உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன் - (2) - நாதா

3.         புதுபாடல் தந்து ஆசீர்வதியும்

            பரவசமாகிடுவேன் - 2

            எக்காளம் நான் ஊதிடுவேன்  - (2) - நாதா

4.         நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில்

            துதி பாடி மகிழ்ந்திருப்பேன் - 2

            கிருபை ஒன்றே போதுமைய்யா  - (2) - நாதா

5.         ஊரெல்லாம் செல்வேன் பறை சாற்றுவேன்

            உம் நாமம் உயர்த்திடுவேன் - 2

            சாத்தான் கோட்டை தகர்த்திடுவேன்  - (2) - நாதா

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

https://www.youtube.com/watch?v=Klol7BfHz3I

https://www.youtube.com/watch?v=LfoFoS95xhY

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...