15 August 2024

தேவாதி தேவன் பிறந்தார்

தேவாதி தேவன் பிறந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   தேவாதி தேவன் பிறந்தார்

                        இராஜாதி இராஜன் பிறந்தார் - 2

                        விண்ணுலகை விட்டு மண்ணுலகில் வந்து

                        மானிடனாய் பிறந்தார் - 2

 

1.         கந்தை ஆடை அணிந்தவராய்

            நிந்தை நீக்க பாரில் பிறந்தார் - 2

            விந்தையாய் இந்த புவியில்

            சிந்தை குளிர இயேசு பிறந்தார் - 2 - தேவாதி தேவன்

 

2.         மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்

            மாதெய்வ மேன்மை துறந்தார் - 2

            ஏழைகளின் கோலம் எடுத்து

            தாழ்மை உருவாய் இயேசு பிறந்தார் - 2 - தேவாதி தேவன்

 

3.         வேதவாக்கு மண்ணில் நிறைவேற

            பாவசாபம் நீக்கப் பிறந்தார் - 2

            தூதர்கள் துதி சாற்றிட

            தூய தேவன் இயேசு பிறந்தார் - 2 - தேவாதி தேவன்

 

 

- Pas. Edith Samuel, Bethel Prayer House, Perungudi.

 

 

https://www.youtube.com/watch?v=dUao5sWbDj4

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...