22 August 2024

நான் உயிரோடிருக்கும் நாளெல்லாம்

நான் உயிரோடிருக்கும் நாளெல்லாம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   நான் உயிரோடிருக்கும் நாளெல்லாம்

                        உம்மை புகழ்ந்து பாடுவேன்

                        நான் உள்ளளவும் என் தேவனை

                        கீர்த்தனம் பண்ணுவேன்

 

            எனக்காய் மரித்த என் தேவன் நீரே

            உந்தன் அன்பை விட்டு விலகி நான் எங்கே போவேன்

            எந்தன் வாழ் நாளெல்லாம் உம்மை புகழ்ந்து பாடுவேன்

            கடைசி மூச்சிலும் சொல்வேன் இயேசு நல்லவர் என்று - 2

 

                        நல்லவர் நீர் மிகவும் நல்லவர் நீர்

                        நல்லவர் நீர் நன்மைகள் செய்பவர் நீர் - 2

 

1.         என்னை வாழ வைக்க ஒப்புக் கொடுத்தீர் உம்மையே

            வாதிக்க கொடுத்தீரே திருவுடலை எனக்காய் - 2

 

                        உந்தன் அன்பு பெரியதே - (4)

                        ஈடு இணையற்றதே

                        உந்தன் கிருபை பெரியதே - (4)

                        கிருபையான இயேசுவே - நல்லவர் நீர்

 

2.         பாவத்தின் முழு உருவமாய் நீர் பாவமானீரே

            பிரிக்கபட்டீரே என்னை இணைத்திடவே - 2 - உந்தன்

 

3.         சாபமுள் முடியை உம் சிரசினில் சுமந்தீரே

            சாபமாய் தொங்கினீரே என்னை ஆசீர்வதிக்கவே - 2 - உந்தன்

 

4.         எந்தன் அனைத்து தீமையும் உம்மேல் வந்ததால்

            உந்தன் அனைத்து நன்மையும் என்மேல் வந்ததே - 2 - உந்தன்

 

 

https://www.youtube.com/watch?v=LH9nmiEUuRk

https://www.youtube.com/watch?v=KZ4B_ZJxwSE

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

சங்கீதசேவை:56 Youtube Link     Text file Download                                  பல்லவி             ஆ...