நன்றி நிறைந்த
இதயத்தோடு
நாதன் இயேசுவை பாடிடுவேன் - 2
நன்றி பலிகள் செலுத்தியே நான்
வாழ்நாள் எல்லாம் உம்மை ஆராதிப்பேன் -
2
என் இயேசு நல்லவர், என் இயேசு
வல்லவர்
என் இயேசு பெரியவர், என் இயேசு
பரிசுத்தர் - 2
1. நான் நடந்து வந்த பாதைகள்
கரடு முரடானவை - 2
என்னை தோளில் தூக்கி சுமந்தார்
அவர் அன்பை மறப்பேனோ - 2 - என் இயேசுவே
2. என் போக்கிலும் எந்தன் வரத்திலும்
என் இயேசுவே பாதுகாப்பு - 2
என் கால்கள் சறுக்கின நேரம்
அவர் கிருபை தாங்கினதே - 2 - என் இயேசுவே
3. என் கரம் பிடித்த இயேசு
என்னை கைவிடவே இல்லை - 2
அவர் நேசம் எந்தன் இன்பம்
அவர் நாமம் போற்றுவேன் - 2 - என் இயேசுவே
- Eva. A. WESLEY MAXWELL
https://www.youtube.com/watch?v=UcO-64AnyPE
https://www.youtube.com/watch?v=Sv0OruXN1_0
No comments:
Post a Comment