20 August 2024

துதிக்க கூடியுள்ளோம் முழுமனதாய்

துதிக்க கூடியுள்ளோம் முழுமனதாய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

            துதிக்க கூடியுள்ளோம் முழுமனதாய்

            ஜெபிக்க கூடியுள்ளோம் ஒருமனதாய் - 2

 

                        இறங்கிடுமே மகிமையாய்

                        நிரப்பிடுமே  ஆவியினால் - 2

 

                        இறங்கினீரே மகிமையாய்

                        நிரப்பினீரே ஆவியினால் - 2

 

1.         நன்மைகள் ஆயிரம் நினைத்து நினைத்து

            துதித்திடுவேன் துதித்திடுவேன் - 2

            நன்றி சொல்லி பாடிடுவேன்

            நன்மைகள் எண்ணி ஆடிடுவேன் - 2 - இறங்கிடுமே

 

2.         ஆவியினாலே நிறைந்து நிறைந்து

            துதித்திடுவேன் துதித்திடுவேன் - 2

            அந்நிய பாஷை ரகசியங்கள்

            இயேசுவோடு பேசிடுவேன் - 2 - இறங்கிடுமே

 

3.         இயேசுவின் நினைவால் நிரம்பி நிரம்பி

            ஜெபித்திடுவேன் ஜெபித்திடுவேன் - 2

            இயேசுவின் ஏக்கம் அறிந்திடுவேன்

            அவரைப்போல ஜெபித்திடுவேன் - 2 - இறங்கினீரே

 

4.         வார்த்தையின் மழையில் நனைந்து நனைந்து

            மகிழ்ந்திடுவேன் பெலனடைவேன் - 2

            சுவிசேஷம் அறிவிப்பேன்

            தைரியமாய் (இயேசுவை) அறிவிப்பேன் - 2 - இறங்கினீரே

 

 

- Jaya Kumaran

 

 

https://www.youtube.com/watch?v=aal9eoFZiJA

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...