நாம் ஒருமித்து வாழ்வோம் என்றால்
நாம் ஒருமித்து
வாழ்வோம் என்றால்
நம் நடுவில் இயேசு நிற்பாரே
- 2 - அப்போது
இருபதில்
இருபதற்கு மேல் எப்படி
நம் நடுவில் இயேசு நிற்பதால்
- எப்படி
நம் நடுவில் இயேசு நிற்பதால்
1. போட்டிகள் பொறாமைகள்
கசப்புகள் சதிகள்
எதுவும் எங்கும் இல்லை
சிறியவன் பெரியவன் பதவிகள் அதிகாரம்
என்பது யாரிலும்
இல்லை - 2
பழைய மனுஷன் இல்லை நம்மில்
பாவ சுபாவமே
இல்லை - ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால்
-ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால்
- நாம்
2. கேபா, அப்பல்லோ, பவுல் என்ற
பிரிவினை நம்மில் இல்லை
அவர்கள் கூட்டம் இவர்கள் கூட்டம்
என்பார் யாருமே இல்லை - 2
சபைகள் ஸ்தாபனம் இல்லை நம்மில்
வடக்கு தெற்கும் இல்லை - ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால்
-ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால்
- நாம்
3. உயர்ந்த குலத்தோர் தாழ்ந்த குலத்தோர்
என்ற தத்துவம் இல்லை
இரண்டு டம்ளர்
இரண்டு வரிசை என்ற
வித்தியாசம் இல்லை - 2
அன்பின் வெள்ளம் உண்டு அவைகளை
அடித்துச் செல்லுதல் உண்டு
- ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால்
-ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால்
- நாம்
4. ஒருவர் கால்களை ஒருவர் கழுவும்
பணிவிடை ஆவியே உண்டு
ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்கும்
சேவை உள்ளமே உண்டு - 2
தலைக்கணமே
இல்லை நம்மில்
இடைவெளியே இல்லை - ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால்
-ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால்
- நாம்
5. ஆவியின் வல்லமை அனைவர் தலையிலும்
வந்து இரங்குதல்
உண்டு
அற்புதம் அடையாளம் ஆச்சரியம் அதிசயம்
சபையிலும் தளத்திலும்
உண்டு - 2
பேய்கள் ஓடுதல் உண்டு எங்கும்
விடுதலை ஆவியே உண்டு - ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால்
-ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால்
- நாம்
6. ஏழு நதியிலும்
இரவும் பகலும்
திரு முழுக்குகள்
உண்டு
சீரும் சிறப்பும்
பெற்று மகிழும்
பாரதம் ஓர்நாள்
உண்டு - 2
சட்டம் ஒழுங்கு உண்டு எங்கும்
நீதி நியாயமே
உண்டு - ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால்
-ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால்
- நாம்
- Dr. N. Emil Jebasingh
https://www.youtube.com/watch?v=kS9QfuV7SvQ
Comments
Post a Comment