என் உயர்ந்த அடைக்கலமே
என் உயர்ந்த அடைக்கலமே
நான் நம்பும் கேடகமே
- 2
ஆபத்தில் அனுகூலமே,
கைவிடாத கன்மலையே - (2)
கிருபை கிருபை கிருபை பெரியதே
கிருபை கிருபை கிருபை சிறந்ததே
(உங்க) - 2
1. முகாந்திரம் இல்லாமல்,
ஒன்றுமே நீர் செய்வதில்லை
சொன்னதை செய்வதில்,
உமக்கு நிகர் யாரும் இல்லை - 2
அற்பமான ஆரம்பம், அற்புதமாய் மாறிடுமே
அடைக்கப்பட்ட வாசல்கள், இன்றைக்கே திறந்திடுமே
-2
தீங்கு
என்னை அணுக விடமாட்டீர்
தீங்கு
என்னை நெருங்க விடமாட்டீர் - கிருபை
2. தேவைகளின் மத்தியிலும், காத்திருப்பேன் பொறுத்திருப்பேன்
உம் மகிமை விளங்கும் வரை, பாதத்திலே நிலைத்திருப்பேன்
- 2
துன்பமான நேரங்கள், இன்பமாக மாறிடுமே
இடிந்துபோன உம் வாழ்க்கை, அலங்கமாய் எழும்பிடுமே
- 2 - தீங்கு
- Pradap jeyaraj
https://www.youtube.com/watch?v=pZtnv4ya81E
Comments
Post a Comment