உடைந்து போன என்னை
உடைந்து போன என்னை
என் தேவன் தெரிந்து கொண்டீர்
பயனில்லாத என்னை நீர் பயன்படுத்துகிறீர் - 2
மனிதன் என்னை வெறுத்த போதிலும்
நீர் விடவில்லை - 2
கிருபையாலே
தினம் தினம்
நடத்தி வருகின்றீர் - உம்
- 2 - உடைந்து போன
1. வழியறியா திகைத்த நேரம்
நீரே வழியானீர்
இருளில் சிக்கி தவித்த
நேரம்
நீரே ஒளியானீர்
- 2
கால்கள் சறுக்கி
இடறுமுன்னே
தாங்கி பிடிக்கின்றீர்
- 2
முன்னும் பின்னும் என்னை
நெறுக்கி பாதுகாக்கின்றீர் - 2 - உடைந்தபோன
2. பெலனில்லாத நேரங்களில்
நீரே பெலனானீர்
ஒதுக்கப்பட்ட நேரங்களில்
நீரே துணையானீர் - 2
ஒன்றுமில்லா நேரத்திலும்
பெயர் சொல்லி அழைத்தீர் - 2
தனிமையான நேரத்திலும்
என் கரம் பிடித்தீர் - 2 - உடைந்து போன
- Sherly Hephzibah J
https://www.youtube.com/watch?v=WwvxlqeuVOE
Comments
Post a Comment