நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை
நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை
நாதன் இயேசு எல்லாம் பார்த்துக்
கொள்வார்
எல்லாம் பார்த்துக் கொள்வார்
- 2
1. ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார்
எதற்கும் பயப்படேன் - 2
அவரே எனது வாழ்வின் பெலனானார் - 2
யாருக்கும் அஞ்சிடேன் - அல்லேலூயா
யாருக்கும் அஞ்சிடேன்
2. கேடு வரும் நாளில் கூடார மறைவினிலே
ஓளித்து வைத்திடுவார் - 2
கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார்
- 2
கலக்கம் எனக்கில்லை - அல்லேலூயா
கலக்கம் எனக்கில்லை
3. தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்
கர்த்தர் சேர்த்துக் கொள்வார் - 2
கர்த்தருக்காய் நான் தினமும் காத்திருப்பேன்
- 2
புது பெலன் பெற்றிடுவேன் - அல்லேலூயா
புது பெலன் பெற்றிடுவேன்
4. கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்பேன்
அதையே நாடுவேன் - 2
வாழ் நாளெல்லாம் அவரின் பிரசன்னத்தில் - 2
வல்லமை பெற்றிடுவேன் - அல்லேலூயா
வல்லமை பெற்றிடுவேன்
5. சிங்கக்குட்டிகள்
பட்டினி கிடந்தாலும்
எனக்கோ குறையில்லை - 2
குறைகளையெல்லாம் நிறைவாக்கித் தந்திடுவார்
- 2
கொஞ்சமும் பயமில்லை - அல்லேலூயா
கொஞ்சமும் பயமில்லை
- பெர்க்மான்ஸ்
https://www.youtube.com/watch?v=sCWHI6Cydjs
https://www.youtube.com/watch?v=DsIom-GVAxI
Comments
Post a Comment