ஆயிரம் நாவுகள் போதாதையா
நீர் செய்த நன்மைகள் விவரிக்க
ஆயிரம் நாட்கள் போதாதையா
உன் நன்மைகளை சொல்லித் துதிக்க - 2
துதிப்பேன் துதிப்பேன்
துதித்துக் கொண்டே இருப்பேன்
- 2
1. என் இருதயத்தின் வேண்டுதலை
உம் செவிகள் கவனித்ததே
கண்ணீரோடு நான் ஜெபித்ததெல்லாம்
உம் கண்கள் கண்டிட்டதே - 2
எனக்கு நேரிட்ட எல்லா நிந்தைகள் நீக்கி
அதிசயமாய் என்னை நடத்தினீரே
நான் நினைத்ததிலும் நான் ஜெபித்ததிலும்
அதிகமாய் எனக்கு செய்தவரே - 2 - துதிப்பேன்
2. உமது கரம் என்னோடிருந்து
தீங்குக்கு விலக்கினதே
என் எல்லைகளை விஸ்தாரமாக்கி
பெருக செய்திட்டதே - 2
தூஷித்தோர் முன்பாக தூற்றினோர் முன்பாக
வலக்கரம் நீட்டி தூக்கி நீரே
என் விழுகையை எதிர் நோக்கிக் காத்திருந்தோர்
முன்பு
உயர்த்தி என்னை வைத்திரே - 2 - துதிப்பேன்
3. என் கால் இடறி நான் விழும்படிக்கு
எதிரியால் தள்ளப்பட்டேன்
கர்த்தரோ என் ஆதரவாய்
என் பக்கம் இருந்தீரே - 2
ஒரு வழியாய் எதிரிட்டு வந்தோரை
ஏழு வழியாய் துரத்தினீரே
விழுங்கும்படி எத்தனிதோரின்
கைக்கு என்னை இரட்சித்தீரே - 2
- Pas. David Ezra
No comments:
Post a Comment