22 August 2024

நான் ஆராதிக்கும் இயேசு இன்றும் ஜீவிக்கிறாரே

நான் ஆராதிக்கும் இயேசு இன்றும் ஜீவிக்கிறாரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          நான் ஆராதிக்கும் இயேசு இன்றும் ஜீவிக்கிறாரே

            அவர் தேவனாயினும் என்னோடு பேசுகின்றாரே

 

            அவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்தது

            அவர் கொண்ட காயங்கள் சுக வாழ்வை தந்தது

 

                        அவர் என்னோடு இருந்தால்

                        ஒரு சேனைக்குள் பாய்வேன்

                        அவர் என்னோடு இருந்தால்

                        ஒரு மதிலை தாண்டுவேன்

 

1.         உடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரு

            அரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரு

            என் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரு

            என் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரு

            அவர் செய்த நன்மையை நான் சொல்லிப் பாடுவேன்

 

2.         இரட்சிப்பின் வஸ்திரத்த உடுத்துவித்தாரு

            நீதியென்னும் மார்க்கவசம் எனக்கு தந்தாரு

            கிருபையைத் தந்து என்னை உயர்த்தி வச்சாரு

            என் நாவின் மேலே அதிகாரம் வச்சாரு

            அவர் செய்த நன்மையை நான் சொல்லிப் பாடுவேன்

 

3.         உலர்ந்துபோன என் கோலை துளிர்க்கச் செய்தாரே

            ஜீவனற்று என் வாழ்வில் ஜீவன் தந்தாரே

            ஒரு சேனையைப்போல என்னை எழும்பச் செய்தாரே

            என் தேசத்தை சுதந்தரிக்கும் பெலனைத் தந்தாரே

 

 

https://www.youtube.com/watch?v=wilvRLMPyog

https://www.youtube.com/watch?v=7qv-CKF2qb0

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...