நான் உம்மை மறந்தாலும்
பல்லவி
நான்
உம்மை மறந்தாலும் - நீர்
என்னை
மறப்பதில்லை
என்
நேசர் இயேசுவே நீர்
எனக்கு
போதுமே
சரணங்கள்
1. தாய்
மறந்தாலும் நீர் மறப்பதில்லை
தந்தை
வெறுத்தாலும் நீர் என்னை விடுவதில்லை - 2
உம்
உள்ளங்கையிலே என்னை வரைந்து வைத்தீரே
உம்மை
என்றுமே நான் பாடி போற்றுவேன் - 2 - நான்
2. பாவ
சேற்றினில் வீழ்ந்து கிடந்தேனே
தூக்கி
எடுத்து உம் மார்பில் அணைத்தீரே - 2
வேத
வசனமே என் பாதைக்கு தீபமே
முடிவு
பரியந்தம் வழி நடத்துமே - 2 - நான்
3. உலகம்
வெறுக்கலாம் உதறித் தள்ளலாம்
உன்னதர்
நிழலிலே நான் சாய்ந்து உறங்குவேன் - 2
உந்தன்
கிருபையே எனக்கு போதுமே
என்னை
என்றுமே நடத்திச் செல்லவே - 2 - நான்
https://www.youtube.com/watch?v=jARlS2G_W3w
Comments
Post a Comment