வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமே

வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

            வாஞ்சையெல்லாம் உம் பிரசன்னமே

            ஏக்கமெல்லாம் உம் சமூகமே - 2

            உருவாக்கிடும், உயிர்ப்பித்திடும்

            தேவ பிரசன்னமே

            உருவாக்கிடும், என்னை உயிர்ப்பித்திடும்

            தேவ பிரசன்னமே

 

                        பிரசன்னமே, பிரசன்னமே

                        தேவ பிரசன்னமே - 2

                        என்னை ஏந்திடும் என்னை தாங்கிடும்

                        என்னை சுமந்திடும் என்னை நடத்திடும்

                        தேவ பிரசன்னமே - 2

 

1.         உடைந்து போன நேரம்

            ஆறுதல் உம் பிரசன்னமே

            தளர்ந்து போன நேரம்

            தூக்கினது உம் பிரசன்னமே - 2

            யாருமில்லா நேரத்தில் துணையாக வந்ததே

            பெலவீன நேரத்தில் பெலன் ஈந்து தந்ததே - 2

 

2.         தரிசனங்கள் தந்து

            எழும்ப செய்த பிரசன்னமே

            அன்றாட கிருபையை

            ருசிக்க செய்யும் பிரசன்னமே (2)

            என் முன்னே வைத்த இலக்கை

            சென்றடைய செய்யுமே

            எனக்காக குறித்த யாவும்

            என்னிடமாய் சேர்க்குமே (2)

 

 

 

- Pr. Peter Parker

 

 

 

https://www.youtube.com/watch?v=OaMimYFW1W8

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு