16 August 2024

நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன்

நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன்

            ஜீவிக்கிறார் என்றும் ஜீவிக்கிறார்

            சத்துருவின் தந்திரங்கள் எல்லாம்

            அழித்திடுவார் அவர்அழித்திடுவார்

 

                        சர்வ வல்ல தேவனையே ஆராதிக்கிறோம்

                        அதிசயம் செய்பவரை ஆராதிக்கிறோம்

 

1.         எரிகிற அக்கினி சூளையிலும்

            விடுதலை அக்கினியாய் வந்திடுவார்

            சேதம் வராமல் காத்திடவே

            தேவகுமாரனாய் வெளிப்படுவார்

            சர்வ வல்ல தேவனையே - 2 நாங்கள்

 

2.         நிகரே இல்லாத பட்டயம் அவர்

            நீதியின் கரத்தினால் நடத்திடுவார்

            உத்தமனே உனக்கு கர்த்தர் துணையே

            உயிரோடு எழுந்தவர் உதவி செய்வார்

            சர்வ வல்ல தேவனையே - 2 நாங்கள்

 

3.         மகிமையாய் எங்கும் வாசம் செய்கிறீர்

            மகிமையின் தேவா உம்மை ஆராதிக்கிறோம்

            துக்கங்கள் எல்லாம் மறைந்திடுமே

            தூதரின் கூட்டமோ ஆர்ப்பரிக்கும்

            சர்வ வல்ல தேவனையே - 2 நாங்கள்

 

4.         சிங்கத்தின் வாயை அடைத்திடுவார்

            எரிகோவின் கோட்டையை அழித்திடுவார்

            இராஜாதி இராஜா வருகின்றாரே

            மேகங்களுடனே வருகின்றாரே

            சர்வ வல்ல தேவனையே - 2 நாங்கள்

 

 

- Jacob Solomon

 

 

https://www.youtube.com/watch?v=gtDkekLLuRw

https://www.youtube.com/watch?v=258fkVWLpz8

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...