இல்லான் எந்தனுக்கு என்றும் நிறைவாய்
இல்லான்
எந்தனுக்கு என்றும் நிறைவாய்
எல்லாம் தந்த உன்னை என்றும் துதிப்பேன்
அனுபல்லவி
உன்னை என்றும் துதிப்பேன்
என்னை ஏற்றுக்கொள்ளுவாய்
வினை மாற்றிய உந்தன்
செயல் போற்றிப் புகழ்வேன்
சரணங்கள்
1. வானம் புவி யாவும் செய்து மங்களமாய் ஏதேன் வைத்தும்
ஈனப் பேயின்
சொல்லைக் கேட்டு தீய கனி தின்று ஜீவன்
2. கோலும் கையுமாக
வந்த கோலமெல்லாம் நீ தவிர்த்து
பாலும் தேனும் ஓடும் கானான் பாக்கியத்தைத் தந்து பொருள்
3. சிங்கக் குகை சிறைச்சாலை சிறந்த அக்கினிச் சூளை
பொங்குங் கடல்
தன்னிலேயும் போற்றி எனைக் காத்து
மீட்பு
4. எல்லாம் இல்லா எந்தனுக்கு
எல்லாம் நலமாகவென்று
எல்லாவற்றுக்
கெல்லாமாக ஈசனுனைத் தந்தாய்
முடிவு கவி
இன்னும் சொல்லத்திறமோ முடிவெல்லை உள்ளதோ
ஒரு நல்ல வரமாய் புகழ் சொல்லத்தருவாய்
- Rao Sahib Abraham Pandithar
https://www.youtube.com/watch?v=W3f0fk_yQ5o
Comments
Post a Comment