நான் ஒரு ஆடு இயேசுவின் ஆடு

நான் ஒரு ஆடு இயேசுவின் ஆடு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          நான் ஒரு ஆடு இயேசுவின் ஆடு

            என் பாதையில் இருள் ஏது

            என்னை தடுக்கின்ற தடை ஏது

 

                        அவர் கரம் பற்றி நடப்பேன்

                        திரும்பிட மாட்டேன்

                        ஓட்டத்தில் ஜெயம் பெறுவேன் - 2

                        நான் சாத்தானை முறியடிப்பேன் - 2

 

1.         சோதனைகள் என்னை சூழ்ந்திட்ட போதும்

            தொடர்ந்தே ஜெயம் பெறுவேன்

            என் பாதையில் சாத்தான் பதிவிருந்தாலும்

            பயமின்றி நடந்திடுவேன் - 2

            என்னோடு இருக்கும் இயேசுவின் பெலத்தால்

            எதனையும் ஜெயித்திடுவேன் - 2

 

2.         காட்டிலும் மேட்டிலும் பயணம் என்றாலும்

            தயங்கிடாமல் நடப்பேன்

            என் ஓட்டத்தில் தடைகள் இடையில் வந்தாலும்

            சுலபமாய் தாண்டிடுவேன் - 2

            பெலன் தரும் தேவ ஆவியின் துணையால்

            மதிலையும் தகர்த்திடுவேன் - 2

 

3.         காற்றுடன் புயலும் அலைகள் வந்தாலும்

            பயமின்றி பயணம் செய்வேன்

            சாத்தானின் சேனைகள் எதிர்த்து வந்தாலும்

            மோதியே மிதித்திடுவேன் - 2

            என் இயேசுவின் பெலத்தால்

            எதனையும் ஜெயித்து எக்காளம் ஊதிடுவேன் - 2

 

4.         அழிந்திடும் மனிதர் கைகளில் கிடக்கும்

            விலங்கினை முறித்திடுவேன்

            விடுதலை அடைந்த மனிதரை

            தேவனின் படையில் சேர்த்திடுவேன் - 2

            தேடியே மனிதரை இயேசுவில் இணைப்பேன்

            தேசத்தை சுதந்தரிப்பேன் - 2

 

 

https://www.youtube.com/watch?v=wORL9C94rbI

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு