நான் உனக்கு போதித்து நடக்கும் பாதையை
நான்
உனக்கு போதித்து நடக்கும் பாதையை
நாள் தோறும் காட்டுவேன் பயப்படாதே
(காத்திரு மகனே)
உன்மேல்
என் கண் வைத்து
ஆலோசனை சொல்லுவேன்
அறிவுரை நான் கூறுவேன் - உனக்கு
1. ஈசாக்கு விதை விதைத்து
நுறுமடங்கு
அறுவடை செய்தான்
உன்னையும் ஆசிர்வதிப்பேன்
- அது போல
2. ஏசேக்கு சித்னா
இன்றோடு முடிந்தது
மகனே (மகளே)
ரெகோபோத் தொடங்கி
விட்டது - உனக்கு
3. தேசத்தில் பலுகும்படி
உனக்கு இடம் உண்டாக்கினேன்
ரெகோபோத் உனக்கு
உண்டு - மகனே
4. கர்த்தர் நிச்சயமாய்
உன்னோடு இருக்கிறார் என்று
அநேகர் அறிந்து
கொள்வார்கள்
இது முதல் அநேகர்
அறிக்கை செய்வார்கள்
5. கலங்காதே நான்
உன்னோடு இருக்கின்றேன் மகனே
பலுகிப் பெருகிடுவாய் - தேசத்தில்
6. உனக்கு எதிரானோர்
உன் சார்பில் வருவார்கள்
சமாதானம் செய்வார்கள் - உன்னோடு
- பெர்க்மான்ஸ்
https://www.youtube.com/watch?v=vgioHuYvcTE
https://www.youtube.com/watch?v=BQ6k_Ty7FIA
Comments
Post a Comment