கஷ்டங்களில் என் கூட இருப்பவரே
கஷ்டங்களில் என்
கூட இருப்பவரே
நஷ்டங்களில்
என் பக்கம் வந்தவரே
அவர் கரங்கள் என்னை வழிநடத்தும்
அவர் வசனம் என்னை பாதுகாத்திடும்
- 2
1. கோர விபத்தென்னை
சூழ்ந்த போதும்
எதிர்பார்த்ததெல்லாம்
இழந்த போதும்
உம் நேசக் கரங்கள்
என் கரம் பிடித்து
பயப்படாதே என்று உரைத்ததே - 2 - கஷ்டங்களில்
2. சாத்தானின் சதியால்
நான் தளர்ந்த போதும்
எதிரிகள் என்னை சூழ்ந்த போதும்
பெயர் சொல்லி அழைத்து ஊழியம் தந்து
பேச வைத்தீர் என்னை உயர்த்தி வைத்தீர்
- 2 - கஷ்டங்களில்
3. ஜெபிக்கவில்லை
நான் நினைக்கவில்லை
நினைப்பதற்கு
முன்னே பதில் தந்தீரே
ஓட வைத்தீர் என்ன பாட வைத்தீர்
உம்மை துதிக்க வைத்தீர் என்றும் புகழ வைத்தீர்
- 2 - கஷ்டங்களில்
- EVA. DR. SREEJITH ABRAHAM
https://www.youtube.com/watch?v=ClrPHLQj56g
Comments
Post a Comment