நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல்
(1கொரி.12:27,
26, எபே.4:26, 25, 28, 29, 31)
நாமே திருச்சபை கிறிஸ்துவின்
திரு உடல்
ஒவ்வொருவரும் அதன் தனித்தனி
உறுப்புக்கள்
1. ஒரு உறுப்பு துன்பப்பட்டால்
துன்பப்பட்டால்
மற்ற அனைத்தும் துன்பப்படும்
கூடவே துன்பப்படும் - 2
உணர்ந்திடுவோம்
இணைந்திடுவோம்
ஓர்
உடலாய் செயல்படுவோம் - 2 - நாமே
2. ஒரு உறுப்பு புகழ் அடைந்தால்
புகழ் அடைந்தால்
மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும்
சேர்ந்து மகிழ்ச்சியுறும் - 2 - உணர்ந்திடுவோம்
3. இயேசு கிறிஸ்து பாடுபட்டு
பகையை ஒழித்தார்
கடவுளோடு ஒப்புரவாக
ஒரு உடலாக்கிவிட்டார்
- 2 - உணர்ந்திடுவோம்
4. பொழுது இன்று சாய்வதற்குள்
சினம் தணியட்டும்
அலகைக்கு இனி
இடம் வேண்டாம்
இடமே கொடுக்க வேண்டாம் - 2 - உணர்ந்திடுவோம்
5. ஓரு உடலாய் இருப்பதனால்
பொய்யை விலக்குவோம்
உண்மைதனை பேசிடுவோம்
நன்மை செய்திடுவோம்
- 2 - உணர்ந்திடுவோம்
6. தேவையிலே
உழல்வோர்க்கு
பகிர்ந்து கொடுத்திட
நம் கைகளால் பாடுபட்டு
உழைத்து மகிழ்ந்திடுவோம்
- 2 - உணர்ந்திடுவோம்
7. கேட்போரெல்லாம்
பயனடைந்து பக்தியில் வளர
நல்வார்த்தை நாள்தோறும் சொல்லி உதவிடுவோம்
- 2 - உணர்ந்திடுவோம்
8. மனக்கசப்பு பழிச்சொற்கள் நீக்க வேண்டுமே
பரிவு காட்டி மனமாற
மன்னிக்க வேண்டுமே - 2 - உணர்ந்திடுவோம்
- பெர்க்மான்ஸ்
https://www.youtube.com/watch?v=7C77h0LANEQ
Comments
Post a Comment