நான் ஆராதிக்க
வேறொரு தெய்வமில்லை
நான் உம்மையே ஆராதிப்பேன் இயேசுவே
நான் ஆராதிக்கும் தெய்வம்
என்னை நேசிக்கும் தெய்வம்
நான் ஆராதிக்கும் தெய்வம்
என்னை விசாரிக்கும் தெய்வம்
நான் ஆராதிக்கும் தெய்வம்
என்னில் அக்கரையுள்ளவர்
அவரே என் உள்ளம் கவர்ந்தவர் - (2)
1. இயற்கையின் மேல் அதிகாரம் உள்ளவர்
இரையாதே என்று கட்டளை கொடுத்தவர் - 2
காற்றையும் கடலையும் அடக்க வல்லவர் -
2
கடினமானதென்று
ஒன்றுமில்லாதவர்
நான் பணிந்திட வேறொரு தெய்வமில்லை
நான் உம்மையே பணிகின்றேன்
இயேசுவே - 2
2. அறிவுக்கு எட்டாத யோசனை
உள்ளவர்
பயந்து நடப்போர்க்கு
ஞானத்தின் ஊற்றவர் - 2
பரலோகம் பூலோகம் இணைக்கும் பாலமவர் - 2
அவரைப் போல் எவரும் நிகரே இல்லாதவர்
நான் துதித்திட வேறொரு தெய்வமில்லை
நான் உம்மையே துதிக்கின்றேன்
இயேசுவே - 2
3. ஊழியப் பாதையில் உற்சாகம் தந்தவர்
பலத்த கிரியைகள்
மகிமையாய் செய்தவர் - 2
அபிஷேக வல்லமை
பெருக செய்தவர் - 2
ஆவியின் வரங்களால் இன்றும் நிறைப்பவர்
நான் உயர்த்திட வேறொரு தெய்வமில்லை
நான் உம்மையே உயர்த்துவேன்
இயேசுவே - 2
4. ஊழியத்தில் அபிஷேகம் தந்தவர்
கிருபைகள் தந்து உயர்த்தி வைத்தவர் -
2
பரிசுத்த வல்லமை பெருகச் செய்தவர் - 2
ஆவியின் வரங்களால் இன்றும் நிறைப்பவர்
நான் துதித்திட வேறொரு தெய்வமில்லை
நான் உம்மையே துதிக்கின்றேன்
இயேசுவே - 2
5. மனிதர்கள்மேல்
மனதுருக்கும் கொண்டவர்
மரித்தோரை எழுப்பி
அற்புதம் செய்தவர் - 2
மாறாத அன்பினை தந்த மன்னவர் - 2
மாந்தர்கள் பணிந்திட என்றும் தகுந்தவர்
நான் துதித்திட வேறொரு தெய்வமில்லை
நான் உம்மையே துதிக்கின்றேன்
இயேசுவே - 2
நான்
ஆராதிக்கும் தெய்வம்
என்னை வனைத்திடும்
தெய்வம்
நான் ஆராதிக்கும் தெய்வம்
என்னை
உயர்த்திடும் தெய்வம்
நான் ஆராதிக்கும்
தெய்வம்
என்னில்
அக்கரையுள்ளவர்
அவரே என் உள்ளம் கவர்ந்தவர்
- (2) - நான் ஆராதிக்க
https://www.youtube.com/watch?v=4FVZz9HrPlQ
No comments:
Post a Comment