நாதா சிறுவரின் பண் கேள் ஐயா
98. இராகம்: மலையாமி. தாளம்: ரூபகம்.
பரிசுத்த சீமோன் யூதா திருநாள் - அக்டோபர் 28ஆம் நாள்
“தேவா திருக்கடைக்கண் பார் ஐயா” - என்ற மெட்டு
பல்லவி
நாதா,
சிறுவரின் பண் கேள் ஐயா!
பவம் தீர் ஐயா, பவம் தீர் ஐயா
அனுபல்லவி
வேதா கிறிஸ்து
இயேசு போதா பரிந்து பேசு - நாதா
சரணங்கள்
1. சீமோன் யூதா திருநாள், சேவித்தோம் இதோ பெருநாள்
ஆமென் அல்லே
லூயா வென்போமே ஐயா - சுவாமி -
நாதா
2. பக்தி வயி ராக்கியத்தால், பாருளோர் செலோத்தே யென்பார்
முத்தி வழியே
தெரிந்தோன் தான் ஐயா - சுவாமி - நாதா
3. கானானிய னான சீமோன், கர்த்தனின்
சகோதரனே
கள்ளர் நச ரேத்தூ ரார்தாம் ஏசினார் - சுவாமி - நாதா
4. சீப்புரு-சிரேனே-மோரி,
ஸ்பானியா பிரிட்டனிலும்
கோப்புடன் சுவிசேடமே கூறினான் - சுவாமி - நாதா
5. சிலுவையில் சீ
மோனும் சாக, சீற்ற முள்ள யூதேயாவில்
சலுகை யில்லாத்
தொமிஷன் காலமே - சுவாமி - நாதா
6. கன்னிமரி சகோதரி
பெற்ற மகனாம் யூதாவும்
பன்னி ரப்போஸ் தல ரோடு சேர்ந்தனன் - சுவாமி - நாதா
7. வேறு பேர் ததே
லெபேயு, விவேகம் யூகம் வைராக்கியம்
மாறு தலுள்
ளவு லோகம் தானையா - சுவாமி -
நாதா
8. ஆண்டவரே எங்களையும், மீண்ட உம்மைக் காட்டியதேன்?
வேண்டுகிறேன் சொல்லும் என்றான் யூதாவும் - சுவாமி - நாதா
9. என்னி லன்போ டென் வசனம், கைக்கொண்டால் நானும் பிதாவும்
உன்னில் வாசம் பண்ணு
வோமென் றோதினீர் - சுவாமி - நாதா
10. மூர்க்க மள்ள பார சீகர்,
மார்க்கம் யூதா போதிக்கவும்
மூட பக்தி ஞானிகளும் கொன்றனர் - சுவாமி
- நாதா
11. பரிசுத்த மார்க்கப்
பட்டோர், பக்தியுடன் காக்கப் பட்டோர்
பார்க்கும்படி யோர்
நிருபம் செய்தனன் - சுவாமி -
நாதா
- S. உவால்டர் கவிராயர்,
தென்மலை.
Comments
Post a Comment