என் மனமே உன்னை மறப்பாரோ
என் மனமே உன்னை மறப்பாரோ?
தேவன் உன்னை மறந்து போவாரோ? - 2
துயரங்கள் எல்லாமே மறையச் செய்வாரே
ஆனந்த தைலத்தை உன் மேல் பொழிவாரே - 2
துதிக்க வைப்பாரே
உன்னை அலங்கரிப்பாரே
இடிந்து போனதெல்லாம்
உயிர்த்தெழும்பச் செய்வாரே
- 2
1. வாதிப்பின் சத்தம் கேட்ட
உன் எல்லை எல்லாமே
வர்த்திப்பின்
பாடல் சத்தம்
இன்று முதல் கேட்குமே - 2
குறுகிப்போவதில்லை
நீ சிறுமை அடைவதில்லை - 2 - துதிக்க
சீர்ப்படுத்தினாரே ஸ்திரப்படுத்தினாரே
பலப்படுத்தினாரே நிலை நிறுத்தினாரே
சீர்ப்படுத்தி உன்னை உயர்த்தி
வைத்த தேவன்
இந்தப் புதிய ஆண்டில் அலங்கரிப்பாரே
2. விசாரிக்க யாருமின்றி
தள்ளுண்ட உன்னையே
ஆரோக்கியம் வரப்பண்ணி
ஆளுகை தருவாரே - 2
இடிந்த அலங்கத்தை (அலங்கம் உன்னை)
அவர் அரண்மனை ஆக்கிடுவார் - 2 - துதிக்க
- Ps. John Jebaraj
https://www.youtube.com/watch?v=K2vXMa9Swmk
Comments
Post a Comment