உங்க பிரசன்னத்தை வேண்டி நிற்கிறேன்
உங்க பிரசன்னத்தை
வேண்டி நிற்கிறேன்
உங்க முகத்தை நான் பார்க்கிறேன்
உங்க பிரசன்னத்தில்
நான் வாழ்ந்திட
என்னையே தத்தம் செய்கிறேன்
- (2)
பரிசுத்தரே! தூயரே!
தாகத்தோடு
கேட்கின்றேன்
என் உச்சி முதல் பாதம் வரை
உம் பிரசன்னத்தால்
நிரப்பிடுமே - (2)
1. கல்லான எந்தன் இதயத்தை
உம் பிரசன்னத்தால்
உடைக்கின்றீர்
சதையான இதயமாய் மாற்றியே
உம் சித்தம் செய்ய வைக்கின்றீர் - பரிசுத்தரே!
2. எல்லாம் உம் கிருபையே - (3)
எல்லாம் உம் கிருபையே - (3)
இம்மட்டும் தாங்கியதும்
இனிமேலும் நடத்துவது
எல்லாம் உம் கிருபையே - 2
தாழ்மையுள்ளவர்க்கு
தாராளமாக கிருபை அளிப்பவரே
தன்னைத்தான்
தாழ்த்தும் எவரையும் நீர் உயர்த்தி வைப்பவரே
உந்தன் கிருபை மேலானதே
ஜீவனைப் பார்க்கிலும்
மேலானதே
3. சிங்காசனத்தில்
வீற்றிருப்பவரே
சதா காலமும் உயிரோடிருப்பவரே
- 2
சகலவற்றையும்
சிருஷ்டித்தவரே
ஆராதனைக்கு பாத்திரரே - 2
எங்கள் மேன்மைகளை
உம் பாதத்தில் வைத்து
ஓயாமல் உம்மை ஆராதிப்போம் - 2
பரிசுத்தர் பரிசுத்தரே நீரே
பரிசுத்தர் பரிசுத்தரே -
2
ஓயாமல் உம்மை ஆராதிப்போம்
பாடியே உம்மை ஆராதிப்போம்
- 2
- Pastor David
https://www.youtube.com/watch?v=a7FWxLV2mzs
PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment