நான் இயேசுவின் படையில் யுத்த வீரன்
நான் இயேசுவின் படையில் யுத்த
வீரன்
யாருக்கும்
அஞ்சமாட்டேன்
இவ்வுலகமே எதிர்ப்பினும்
சற்றும்
பயமின்றி துணிந்தே செயல்படுவேன்
உள்ளத்தில் நிறைந்த உன்னதர்
இயேசுவை ஓயாமல் பாடிடுவேன்
வாக்கும் ஞானமும் வல்லவர் தருவதால்
எதிர்ப்போரை வீழ்த்திடுவேன்
1. எனக்கு
பெலன் தரும் கிறிஸ்துவினாலே
எல்லாம்
செய்திடுவேன்
என்
தேவனால் கூடாத காரியம் இல்லை
உத்தமர் துணை அவரே - 2
இக்கல்லில்
மோதுபவன்-அவன்
நொறுங்கிப்
போய்விடுவான்
இது
எவன் மேல் விழுந்திடுமோ
அவன்
நசுங்கி அழிந்திடுவான்
2. அவர்
தரும் பெலத்தால் சேனைக்குள்
பாய்வேன்
அதனை முறியடிப்பேன்
என்
தேவனால் பெரிய மதிலை தாண்டுவேன்
தீங்கென்னைத் தொடராதே - 2 - இக்கல்லில்
3. இயேசு
இரட்சகர் என்பக்கம் இருக்க
என்னை
எதிர்ப்பவன் யார்
கிறிஸ்து
என் ஜீவன் சாவு ஆதாயம்
என்றே
கூறிடுவேன் - 2 - இக்கல்லில்
4. மான்
கால்களாக என் கால்கள் மாற்றுவார்
உயர்ந்த
ஸ்தலம் அளிப்பார்
யுத்தம்
செய்ய என் கைகள் பழக்குவார்
வெற்றி
எனதல்லவோ - 2 - இக்கல்லில்
5. நிச்சயம்
ஒருநாள் இவ்வுயிர் பிரியும்
உண்மை
இதுவன்றோ
நம்மை
இரத்த சாட்சியாய் கொடுத்தால்
மகிமை
இயேசுவுக்கே - 2 - இக்கல்லில்
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment