நான் உனக்கு துணை நிற்கிறேன்
நான்
உனக்கு துணை நிற்கிறேன்
என்றவரே ஸ்தோத்திரம் - 2
வலக்கரம் பிடித்து துணையாய்
நிற்பவரே
வல்ல தேவனே ஸ்தோத்திரம்
1. பாவத்தை ஜெயிக்க
பரிசுத்தமாய் வாழ
துணை நிற்பவரே ஸ்தோத்திரம் - 2
இரத்தத்தால் கழுவி ஆவியினால் நிரப்பி
அரவணைத்தவரே
ஸ்தோத்திரம் - 2
2. பாடுகள் சகிக்க
மகிழ்ச்சியாய் நாம் வாழ
துணை நிற்பவரே ஸ்தோத்திரம் - 2
வார்த்தையால் தேற்றிவல்லமையால்
நிரப்பி
நடத்துபவரே
என்றும் ஸ்தோத்திரம் - 2
3. சாத்தானை ஜெயிக்க
வெற்றியாய் என்றும் வாழ
துணை நிற்பவரே ஸ்தோத்திரம் - 2
அன்பினால் அணைத்து அபிஷேகத்தால் நிரப்பி
ஆதரிப்பவரே
என்றும் ஸ்தோத்திரம் - 2
https://www.youtube.com/watch?v=C1ov-PAlGVs
https://www.youtube.com/watch?v=TtSOFedlMHo
Comments
Post a Comment