நான் உங்களைத் திக்கற்ற நிலையில்
நான்
உங்களைத் திக்கற்ற நிலையில்
விட்டு
விடுவதில்லை, விலகியும் போவதில்லை
அழைத்தவர் நானல்லவோ!
அநுகூலத்
துணையல்லவோ!!
1. மண்ணினாலே உருவாக்கி உயிர் தந்தேன் நான்
மகிமையின் ஆடையால் அலங்கரித்தேன்
மனம் பதறி விலகிச் சென்றாய் நீ
மன்னிப்பு கேட்டிட
மறந்தாயே
ஆனாலும் உன்னை மறப்பதில்லை (2)
மறுபடியும் தேடி வந்து அணைத்தேனே
2. உடன்படிக்கைச்
செய்திட முன் குறித்தேன் நான்
உயிருடன் பேழைக்குள் பாதுகாத்தேனே
உலகமே நீரினில்
மூழ்கினாலும்,
உறவுகள் நித்தமும் நிந்தித்தாலும்
உலகத்தை கொரோனா
தாக்கினாலும்
உறவுகள் கொடூரமாய்
தண்டித்தாலும்
உண்மையாக கிருபை காண்பித்தேனே
(2)
உன் மேல் எந்தன் கண்ணை வைத்து நடத்திட்டேனே
3. பெயர் சொல்லி அழைத்திட்ட
பெரியவர் நான்
பெரும் பாதகத்துக்கு
உன்னை நீங்கலாக்கினேன்
பெருமையின் ஆணவத்தில் விழுந்தாயே,
பெரு மூச்சின்
சத்தத்துடன் புலம்பினாயே
பெரிய நாமத்தை உனக்கு தரிப்பித்தேனே - உன்
பெயரை (இஸ்ரவேல்)
தேசத்திற்கே பொரித்துவிட்டேனே!
https://www.youtube.com/watch?v=cGDscEPLLds
சகோ.
பழனி S. சாமுவேல்
Comments
Post a Comment