ஏனோ தெரியாத வலிகள்

ஏனோ தெரியாத வலிகள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          ஏனோ தெரியாத வலிகள்

            ஏனோ தெரியாத வேதனைகள்

            இன்னும் ஏனோ தெரியாத துக்கம்

            என்னை வாட்டி வதைக்கிறது - 2

 

                        இயேசுவே நீரே என் ஆச்சரியமும் என் துருகம்

                        இயேசுவே நீரே என் ஆறுதலும்

                        இயேசுவே நீரே என் கேடகமும் என் பலமும்

                        இயேசுவே நீரே என் நம்பிக்கை - 2 - ஏனோ

 

1.         கருணை காட்டும் மனிதருக்காக

            காத்துக் கொண்டிருந்தேன் நானும்

            யாரையுமே காணவில்லை

            ஆறுதல் சொல்லும் மனிதருக்காக 

            காத்துக் கொண்டிருந்தேன் நானும்

            யாரையுமே காணவில்லை

                        உன் வேத வாக்கியம் என்னை காப்பாற்றியது

                        உன் பலமான வாக்கியம் என்னுள் நிற்கிறது   - 2 - இயேசுவே

 

2.         இரக்கம் காட்டும் மனிதருக்காக

            காத்துக் கொண்டிருந்தேன் நானும்

            யாரையுமே காணவில்லை

            அன்பு  காட்டும் மனிதருக்காக

            காத்துக் கொண்டிருந்தேன் நானும்

            யாரையுமே காணவில்லை

                        உன் வாசஸ்தலம் என்னை அணைத்துக் கொண்டது

                        சந்தோஷமாய் என்னுள் பொங்கி வழிகிறது   - 2 - ஏனோ

 

 

- Dr. Emimah Edwina Moses

 

 

https://www.youtube.com/watch?v=l1JzMMnrsDo

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு