23 August 2024

ஆயிரம் தோத்திரமே இயேசுவே

நிஜீ.கீதங்கள்:33

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆயிரம் தோத்திரமே

                        இயேசுவே பாத்திரரே

                        பள்ளத்தாக்கிலே அவர் லீலி

                        சாரோனிலே ஓர் ரோஜா

 

1.         வாலிப நாட்களிலே

            என்னை படைத்தவரை நினைத்தேன்

            ஏற்றிய தீபத்தால் இதயமே நிறைந்தது

            இயேசுவின் அன்பினாலே

 

2.         உலக மேன்மை யாவும்

            நஷ்டமாய் எண்ணிடுவேன்

            சிலுவை சுமப்பதே லாபமாய் நினைத்தே

            சாத்தானை முறியடிப்பேன்

 

3.         சிற்றின்ப கவர்ச்சிகளை

            வெறுக்கும் ஓர் இதயம் தந்தீர்

            துன்பத்தின் மிகுதியால்

            நோவுக்குள் வந்தாலும்

            ஆவியால் மகிழ்ந்திடுவேன்

 

4.         பலவித சோதனையை

            சந்தோஷமாய் நினைப்பேன்

            எண்ணங்கள் சிறையாக்கி

            இயேசுவுக்கு கீழ்ப்படுத்தி

            விசுவாசத்தில் வளர்வேன்

 

5.         இயேசுவின் நாமத்திலே

            ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு

            அல்லேலூயா ஸ்தோத்திரம்

            இயேசுவே வாரும்

            என்றென்றும் உம்மில் வாழ

 

 

https://www.youtube.com/watch?v=XRqQQnG1s_s

https://www.youtube.com/watch?v=V0fAHmo_Yhg

No comments:

Post a Comment

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

சங்கீதசேவை:56 Youtube Link     Text file Download                                  பல்லவி             ஆ...