யுத்தம் இது கர்த்தரின் யுத்தம்

யுத்தம் இது கர்த்தரின் யுத்தம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

            யுத்தம் இது கர்த்தரின் யுத்தம்

            நித்தம் அவர் எனக்காய் செய்வார்

            சேனைகளின் கர்த்தர் அவரே

            யுத்தத்தில் என்றும் பெரியவரே - 2

 

                        பயமில்லை பயம் இல்லையே

                        கர்த்தர் என்னோடிருப்பதால்

                        பயமில்லை பயம் இல்லையே

                        கர்த்தர் என் முன் நிற்பதால் - 2

 

1.         கோலியாத்து வந்தாலும் எதிரிகள் வந்தாலும்

            பின்னிட்டு ஓடச் செய்வார்

            தலைதெறிக்க ஓடச் செய்வார் - 2

            பட்டயத்தால் அல்லவே அல்ல

            ஈட்டியால் அல்லவே அல்ல - 2

            இயேசு நாமத்தால் எதிர்த்திடுவேன்

            அவர் வார்த்தையால் ஜெயம் எடுப்பேன் - 2 - பயமில்லை

 

2.         மலைகளைப் பெயர்த்து தடைகளை உடைத்து

            மேடுகளை சமமாக்குவார் எல்லா கோணல்களை நேராக்குவார் - 2

            பலத்தினால் அல்லவே அல்ல பராக்கிரமம் அல்லவே அல்ல - 2

            ஆவியால் எல்லாமாகும் விசுவாசித்தால் எல்லாம் ஆகும்- 2 - பயமில்லை

 

3.         ஏசேக்கு போனாலும் சித்தனாவும் போனாலும்

            ரெகொபோத்தை தந்திடுவார் ஜீவ நதியாகப் பாயச் செய்வார் - 2

            காற்றினால் அல்லவே அல்ல மழையினால் அல்லவே அல்ல - 2

            துதியினால் வாய்த்திடுமே வாய்க்கால்கள் தண்ணீரால் நிரம்பிடுமே - 2 - பயமில்லை

 

 

- Stephen Jayakumar

 

 

https://www.youtube.com/watch?v=h_InzVzmZz0

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு