நன்றியால்
பொங்குதே எமதுள்ளம்
நாதன் செய் பல நன்மைகட்காய்
- 2
நாடோறும் நலமுடன் காத்தனரே
நன்றியால் ஸ்தோத்தரிப்போம்
- அல்லேலூயா
நன்றியால் ஸ்தோத்தரிப்போம்
- நன்றியால்
1. கடந்த வாழ்நாளில் கருத்துடனே
கண்மணிப் போல் நம்மை காத்தனரே - 2
கண்ணீர் கவலையினை மாற்றினாரே
கனிவுடன் ஸ்தோத்தரிப்போம் - அல்லேலூயா
கனிவுடன் ஸ்தோத்தரிப்போம் - நன்றியால்
2. ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்து
ஜீவிய பாதையில் நடத்தினாரே - 2
ஜீவ காலமெல்லாம் ஸ்தோத்தரிப்போம்
ஜீவனின் அதிபதியை - அல்லேலூயா
ஜீவனின் அதிபதியை - நன்றியால்
3. அற்புத கரம் கொண்டு நடத்தினாரே
அதிசயங்கள் பல புரிந்தனரே - 2
ஆயிரம் நாவுகள் தான் போதுமோ
ஆண்டவரை துதிக்க - அல்லேலூயா
ஆண்டவரை துதிக்க - நன்றியால்
4. பாவ சேற்றில் அமிழ்ந்த நம்மை
பாசகரம் கொண்டு தூக்கினாரே - 2
கன்மலை மேல் நம்மை நிறுத்தி அவர்
கருத்துடன் காத்தனரே - அல்லேலூயா
கருத்துடன் காத்தனரே - நன்றியால்
5. பொருத்தனை பலிகள் தினம் செலுத்தி
பொற்பரன் இயேசுவை வாழ்த்திடுவோம் - 2
ஸ்தோத்திர பாத்திரன் இயேசுவையே
நேத்திரமாய் துதிப்போம் - அல்லேலூயா
நேத்திரமாய் துதிப்போம் - நன்றியால்
https://www.youtube.com/watch?v=0jUy-7f43w0
PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment