நன்றி நிறைந்த
உள்ளத்தோடு
நாதன் இயேசுவை நான் பாடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா - 2
1. ஊதாரி மைந்தனாய்
உலகினில் அலைந்தேன்
உண்மையாய் தேடி வந்தீர் - 2
உந்தன் மகனாக மாற்றி விட்டீர்
2. உளையான சேற்றில்
உருமாறி கிடந்தேன்
உண்மையாய் தூக்கி விட்டீர்
என்னை உம்மோடு அமரச் செய்தீர்
3. மண்ணான எனக்கு
மகிமையின் வாழ்வு
மன்னா நீர் கொடுத்தீரே
என்னை மார்போடு அணைத்தீரே
https://www.youtube.com/watch?v=ytXMEDAfM58
No comments:
Post a Comment