நன்றி நிறைந்த உள்ளத்தோடு
இயேசப்பா
நாள்தோறும்
பாடித் துதிப்பேன் இயேசப்பா
நீர்
செய்த நன்மைகள் நீர் செய்த அதிசயங்கள்
ஒரு
போதும் மறந்திட மாட்டேன்
1. கடந்து வந்த பாதைகள்
ஒவ்வொன்றிலும்
கரம் பிடித்து
கண்மணி போல்
காத்து வந்தீரே
கோணலான பாதையிலும்
குறுகலான வழிகளிலும்
தோள்
மேலே என்னை சுமந்து வந்தீரே
2. சத்துருக்கள் வெள்ளம் போல் சூழ்ந்த நேரத்தில்
ஆவியானவர்
என்னில் ஜெயம் தந்தீரே
மரண
இருள் நேரத்திலும்
பள்ளத்தாக்கு வழிகளிலும்
மார்போடு
என்னை அணைத்துக் கொண்டீரே
3. பாதை
காட்டும் தீபங்கள் அணைந்த நேரத்தில்
வாதை
ஒன்றும் அணுகிடாமல்
மறைத்துக்
கொண்டீரே
விசுவாசம் நம்பிக்கையும் குறைந்தே போகாமல்
வார்த்தையினால்
தினமும் தேற்றினீரே
No comments:
Post a Comment