15 August 2024

நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்

நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன்

                        நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிறேன்

                        நன்றி ஐயா நன்றி ஐயா - இயேசையா

 

1.         தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர்

            தாங்கி தாங்கி வழி நடத்தி மகிழ்கின்றீர்

            அதிசயங்கள் ஆயிரம்

            அன்பரே உம் கரங்களிலே - நன்றி

2.         பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர்

            பெரும் பெரும் காரியங்கள் செய்கின்றீர்

            தீமையான அனைத்தையும்

            நன்மையாக மாற்றுகிறீர்

3.         உணவு உடை தினம் தந்து மகிழ்கின்றீர்

            உண்மையான நண்பர்களை தருகின்றீர்

            நன்மையான ஈவுகள்

            நாள்தோறும் தருபவரே

4.         கதறி அழுத நேரமெல்லாம் தூக்கினீர்

            கருவியாக பயன்படுத்தி வருகின்றீர்

            கண்மணிபோல் காப்பவரே

            கைவிடாமல் மேய்ப்பவரே

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

https://www.youtube.com/watch?v=yJRMcJ7Mtzg

https://www.youtube.com/watch?v=3Be0hN8Piv4

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...