15 August 2024

நன்றி ராஜனே நன்றி இயேசுவே

நன்றி ராஜனே நன்றி இயேசுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          நன்றி ராஜனே நன்றி இயேசுவே

            நன்றி தேவனே நன்றி தகப்பனே

 

                        எல்லா நிலைமையிலும்

                        நன்றி சொல்லுவேன்

                        எந்நாட்களிலும் நன்றி சொல்லுவேன்

                        தேவன் கொடுத்தாலும் நன்றி சொல்லுவேன்

                        கொடுத்ததை எடுத்தாலும் நன்றி சொல்லுவேன்

 

1.         அற்பமும் குப்பையுமான என்னை

            நினைத்தீரே நன்றி ராஜா

            பாவத்தில் மூழ்கிய பாவி என்னை

            நேசித்தீரே நன்றி ராஜா

            நானே என்னை விரும்பவில்லையே

            ஆனால் என்னை விரும்பும் தேவனே

            நேற்றும் இன்றும் என்றும் மாறா

            பாசம் நேசம் பொழியும் தேவா

            பிள்ளை என்றீரே என்னை அணைத்துக் கொண்டீரே

 

2.         மலை போன்ற சூழ்நிலைகளை

            மண்ணோடு மண்ணாக்கினீர்

            என்னை எதிர்த்து வந்த சத்துருக்களை

            வேறோடு அழித்துவிட்டீர்

            எனக்காக என்றும் யுத்தம் செய்கிறீர்

            நித்தம் நித்தம் காத்து வருகிறீர்

            பயமும் துக்கமும் என் வாழ்வில் இல்லை

            என்னை காப்பவர் நீர் உறங்குவதில்லை

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...