தாவீதின் ஊர்தனிலே சின்னப்பாலகா


19.         உசேனி                                 ஆதி தாளம்

1.       தாவீதின் ஊர்தனிலே சின்னப்பாலகா
            சத்திரத்தின் பக்கத்திலே

2.         மாட்டுத்தொழுவத்திலே சின்னப்பாலகா
            மாடடையுங் கொட்டிலிலே

3.         சேலை துணியுமின்றி சின்னப்பாலகா
            சிலிர்த்து நீர் தூங்கையிலே

4.         சாஸ்திரிமார்கள் வந்து சின்னப்பாலகா
            சாஷ்டாங்க தொண்டனிட்டார்

5.         காணிக்கை வைத்தனரே சின்னப்பாலகா
            கண்டு நின்று ஆர்ப்பரித்தார்

6.         தூதர்கள் பாடினாரே சின்னப்பாலகா
            தோத்திர கீதங்களை

7.         நாங்களும் கண்டோமையா சின்னப்பாலகா
            நாட்டிலில்லா ஆச்சரியம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே