துதி நித்தமும் முமக்கே தகும்


21.         செங்சுருட்டி                     ரூபக தாளம்

பல்லவி

          துதி நித்தமும் முமக்கே தகும் (2 தடவை)
            துரை ஏசெனு நாமா

1.         அதி உன்னத பரம் விட்டிந்த
            பதிபெத்தலை மேவு கர்த்தனை            - துதி

2.         நீதியாடையினாலெமை மூட
            நீதனே பழங்கந்தை சூடினீர்                - துதி

3.         மாது தீவினை நீக்கவே மரி
            மாதினுந்தியில் வந்த சுந்தரா               - துதி

4.         பசாசின் செய்கையழிக்க வந்த
            பராபரனின் குமாரனே ஏசு                      - துதி

5.         வல்லராஜரின் மாடம் நீக்கியே
            புல்லணை வந்த போத நாதனே            - துதி

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு