16 May 2018

கன்னி வயிற்றில் கர்த்தர் பிறந்தார் காணவாருமே


37.         செஞ்சுருட்டி        ஆதி தாளம்

1.       கன்னி வயிற்றில் கர்த்தர் பிறந்தார் காணவாருமே
            எங்கள் பாவம் போக்கவந்த இயேசு ராஜனுக்கு ஜே
            எங்கள் பாவம் போக்கவந்த ஏசுராஜனுக்கு ஜே ஜே ஜே

2.         மூவரொருவரான தேவன் முன்னணையிலே
            மாட்டுக்கொட்டிலில் பிறந்த தேவசுதனுக்கு ஜே
            மாட்டுக்கொட்டிலில் பிறந்த தேவசுதனுக்கு ஜே ஜே ஜே

3.         ஏதேன் வனத்தில் ஏவை செய்த தீதகற்றவே
            யூத வங்கிஷத்துதித்த மேசியாவுக்கு ஜே
            யூத வங்கிஷத்துதித்த மேசியாவுக்கு ஜே ஜே ஜே

4.         கந்த தூப வர்க்கத்தொடே மங்களம் பாட
            சுந்தரம் சேர் எந்தன் மகா ஏசு ராஜனுக்கு ஜே
            சுந்தரம் சேர் எந்தன் மகா ஏசு ராஜனுக்கு ஜே ஜே ஜே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...