தாவீதின் புத்திரனை சாலோமின் மங்களனை
36. இராகம் (இம்மானுவேலரசே)
பல்லவி
தாவீதின்
புத்திரனை சாலோமின் மங்களனை
சுவாமி
என் ஆண்டவனை தாம் தாம் தாம்
அனுபல்லவி
பாடினேன் தினம் தேடினேன் - தாவீதின்
1. பரமண்டலாதிபனை பாவியின் ரட்சகனை
பரிசுத்தரூயியனைப் பார் பார் பார்
பாடுவேன் தினம் தேடுவேன் - தாவீதின்
2. பொன்னகர் மன்னவனை பூமியில் வந்தவனை
என்னேரமும் துதிப்பேன் நான் நான் நான்
ஏற்றுவேன் புகழ் ஏற்றுவேன் - தாவீதின்
3. ஆட்டுக்குட்டியானவனை ஆண்டவர் தன் மகனை
ஆத்தும ரட்சகனை ஆம்! ஆம்! ஆம்!
அண்டினேன் பதம் அண்டினேன் - தாவீதின்
4. இம்மானுவேலரசை ஏழை மரிசுதனை
இத்தரை மீட்டவனைத் தான் தான் தான்
ஏற்றுவேன் துதி ஏற்றுவேன் - தாவீதின்
5. நித்திய சத்தியனை நீதியின் சூரியனை
நேசனாம் ஏசையனை யான் யான் யான்
நேத்திரமுடன் நோக்குவேன் - தாவீதின்
Comments
Post a Comment