14 May 2018

ஏதிம் மனுவேடம் தரித்தீர்


3          காப்பி                                                              ஆதிதாளம்

பல்லவி

                   ஏதிம் மனுவேடம் தரித்தீர்

அனுபல்லவி

          ஏசையா மேசையா ஆசையாய் சாமி

1.         மாது ஏவை வாழவோ மருளலகை தாழவோ
            ஏதன் வினை மாளவோ எம்மை அரசாளவோ    - ஏதிம்

2.         சுத்த தேவ பாலனே சுந்தரக்குமாரனே
            நத்த துதியேகனே நேமியாள் செங்கோலனே      - ஏதிம்

3.         காயமில்லா நேயனே கருணைபொழி வாயனே
            தூய தூய தூயனே தோத்திரம் நல்லாயனே         - ஏதிம்

4.         நீதி நிறைவேறவோ நீசர் கரை ஏறவோ
            ஏது சாவு நேரவோ ஈனக்குரு சேறவோ               - ஏதிம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...