15 May 2018

சந்தோஷ தினம் சந்தோஷ தினம் சுவாமி பிறந்த நாள்


14          செஞ்சுருட்டி                             ரூபக தாளம்

பல்லவி

          சந்தோஷ தினம் சந்தோஷ தினம் சுவாமி பிறந்த நாள்

அனுபல்லவி

          சுந்தரதேவசுதன் கிறிஸ்தேசு சுவாமி பிறந்த நாள்

1.         அந்தர பூலோகசுவர்க்கமனைத்தும் அமைத்த திருச்சுதன்
            நிந்தைமிகும் குடில் வந்து கந்தைதனை நேரே போர்த்தனரே - சந்தோஷ

2.         தீர்க்கர் செப்பிய மொழிப்படியே செந்தாமரை மலர்
            ஜெருசலைப்பதி அடுத்த பெத்தலைத்தீரத்திற் பிறந்தார்          - சந்தோஷ

3.         பொன்னுலகத்தினில் தேவனுக்கே துதி பூலோகத்தினிலும்
            மண்ணில் சமாதானம் மானிடர் மேல் பிரியமாய்    வாழ்பவரே     - சந்தோஷ

4.         தூதர்கள் சேனைகள் கூடி மகிழ்ந்து கொண்டாடு வதைப்பாரும்
            சோபனம் சோபனம் ஏசுசுவாமியைத் தொட்டிலில் போய் பாரும்   - சந்தோஷ

5.         சிமியோன் அன்னாள் செங்கரத்தேந்திய ஏசு ரட்சகரே
            திருமுகப் பிரகாசமருளும் தேவ ரட்சகரே                                 - சந்தோஷ

6.         அலகை சிரசை மிதித்து வெற்றியை அளித்த ராஜாவே
            பலகோடி நாவால் புகழ்ந்து முடியா பார்த்திபனிவரே                   - சந்தோஷ

7.         எல்லாரும் வாரும் ஏசுசுவாமியை ஏற்றித் துதித்திடுவோம்
            பொல்லாத பாவிகளாகிய நம்மைப்புரந்தவரிவரே                       - சந்தோஷ

8.         இந்த ரட்சகரையல்லாமல் வேறொரு ரட்சகரில்லையே
            எங்கள் பாவச்சுமை நீக்கிடவந்த இம்மானுவேலிவரே               - சந்தோஷ

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...