நாம் நற்சுகமாய் பெத்லேம் நகர் பொய் திரும்புவோம்
13 செஞ்சுருட்டி ஆதி
தாளம்
பல்லவி
நாம் நற்சுகமாய்
பெத்லேம் நகர் பொய் திரும்புவோம்
அனுபல்லவி
இதோ வாரும் போவோம் ஜல்தி
- நாம்
1. என்றும் கேளா வானகீதம் இன்று கேட்குதே - அது
இன்றுமுதல் எங்கள் துயர் என்றும் நீக்குதே
- இதோ
2. யூதேயா தேசம் தாவீது வேந்தன் கிளையில் - இது
ஏதையா இதுவிசேஷம் இந்த நாளையில் - இதோ
3. வானபரன் கிருபையினால் ஞானமாகவே - நர
ரானமகா தாழ்மையைப் போய் பார்த்துவரவே - இதோ
4. ஆதிமனுடர்கள் புவிபாவம் தீர்ப்பதாய் - பரஞ்
ஜோதி புவி வந்தாரே இதன் பின் ஆழமே - இதோ
5. சங்கீதத் தொனியாய் வளர் பெத்லேம் ஓடுவோம்
- மகிழ்
கெம்பீரத்தோடெக்காளமாய் கீதம் பாடுவோம் - இதோ
6. ஊக்கமிகும் திருச்சபையோர் குருக்கள் மார்களும்
- இனி
நீக்கமில் சமாதானமாய் நிலைத்து வாழவே - இதோ
Comments
Post a Comment