நேச ஏசு பாலனை நித்தம் துதித்துப்பாடுவோம்
12 இராகம்
(ஏசுமகராஜனை என்றும்)
பல்லவி
நேச ஏசு பாலனை நித்தம் துதித்துப்பாடுவோம்
அனுபல்லவி
ஆசையோடு பாசமாய் அவர் பாதத்தை
தேடுவோம்
1. காவில் ஏவை செய்தமா பாதகம் தொலைக்கவே
ஜீவ தேவ தேவனார் சிறுபாலனாயினர் - நேச
2. வான சேனை கூடுதே மங்களங்கள் பாடுதே
ஈனப்பேயும் ஓடுதே எங்கும் புகழ் நீடுதே
- நேச
3. பாவிகளை மீட்கவே பரலோகம் சேர்க்கவே
ஆவியான ரூபனார் அற்பநரராகினார் - நேச
4. சங்கீதங்கள் பாடுவோம் சுவாமி ஏசுநாதர்க்கே
இங்கிதம் கொண்டாடுவோம் இஸ்ரவேலின் மீட்பர்க்கே - நேச
5. சத்தியம் தவறாத்தம் புத்திரரைத் தந்த நம்
நித்திய பிதாவுக்கே நீடித்துதி செலுத்துவோம்
- நேச
6. சுவாமி ஏசு நாதனை சந்ததமும் போற்றுவோம்
நேமிவந்த ராஜன் மேல் நேசர் கவி சாற்றுவோம் - நேச
Comments
Post a Comment