கர்த்தர் பிறந்தார் உத்தமர் மகிழ்வார் துத்தியம் செய்வோமே


15.         காம்போதி (அன்பரே என்னுட தோழரே)  ஏகதாளம்

1.       கர்த்தர் பிறந்தார் உத்தமர் மகிழ்வார் துத்தியம் செய்வோமே - நாம் நாம்
            காவலவர் தாம் பாவிகள் நமக்கு களித்திடுவோம் நாமே

2.         சத்தமிட்டு இதயம் மகிழ்ந்து சுவாமியைத்துதித்திடுவோம் - ஏசு
            சகல பாவங்களையும் தீர்க்க தற்பரன் பிறந்தாரே

3.         பெத்தலேகேம் ஊரில்வந்து பிள்ளையாய் பிறந்தாரே - எளிய
            பேயின் தலையை நசுக்கவென்று பேதை போலானாரே

4.         தேவதூதர் வணங்கி நிற்க ஜெயமாய் பிறந்தாரே உலகில்
            தேவகோபம் தீர்க்கவென்று சிறியவரானாரே

5.         இடையர் வந்து பாதம் பணிந்தார் எழுந்திருப்போம் நாமே - இப்போ
            இஸ்ரவேலின் மகிமை இவரே இவரைத் தொழுதிடுவோம்

6.         சாலேம் நகரில் மேலோர் கூட்டம் தவித்துப் படுத்திருந்தார் - ஆகா
            திருச்செந்தூரின் ஜனங்கள் நாங்கள் சுவாமியை அறிய வந்தோம்

7.         வீட்டையும் விட்டு நாட்டையும் விட்டு தொழுவத்திலே பிறந்தார் - மாட்டு
            மேன்மை நமக்குக்கொடுக்கவென்று விரும்பிப் பிறந்தாரே

8.         சீலையுமின்றித் துணியுமின்றிச் சிலிர்த்துப்படுத்திருந்தார் - பாலன்
            கோலாகோலம் கந்தை மூடி குளிரை அனுபவித்தார்

9.         பாவிகள் நமக்கு பாக்கியம் தரவே பரனார் கருவமைத்தார்
            கூவி அழுதும் எடுப்பாரின்றிக் குளிரை அனுபவித்தார்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு