பெத்தலேகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி
16. சங்கராபரணம் ஏகதாளம்
பல்லவி
பெத்தலேகேம் ஊரோரம் சத்திரத்தை
நாடி
அனுபல்லவி
கர்த்தன் இயேசு பாலனுக்கு துத்தியங்கள்
பாடி
பக்தியுடன் உத்தமியே வாடி -
பெத்தலேகேம்
1. காலம்
நிறைவேறினபோ திஸ்திரியின் வித்து
சீலகன்னி
கற்பத்தாவியாலே உற்பவித்து
பாலனான
ஏசு மேசியாவே -
பெத்தலேகேம்
2. எல்லை
இல்லா ஞானபரன் வெல்லை மலையோரம்
புல்லனையிலே
பிறந்தார் வெல்லையின் கெம்பீரம்
தொல்லை
மிகும் அவ்விருட்டு நேரம் -
பெத்தலேகேம்
3. வான்
புவி ஆள்ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ
வானவர்க்கு
வாய்த்த மெத்தை வாடின புல் பூண்டோ
தானே பழம் கந்தையல்லோ மானே - பெத்தலேகேம்
4. அந்தரத்தில்
பாடுகிறார் தூதர் சேனை கூடி
மந்தை
மேய்ப்பர் ஓடுகிறார் பாடல் கேட்கத் தேடி
இன்றிரவில்
என்ன இந்த மோடி -
பெத்தலேகேம்
5. ஆட்டிடைய
ரஞ்சுகிறார் அவர் மகிமை கண்டு
திட்டமுடன் காபிரியேல் சொன்ன செய்தி கேட்டு
நாட்டமுடன்
ரட்சகரைக் காண -
பெத்தலேகேம்
6. இந்திரியோடு
கண்டரசர் மூவர் நடந்தாரே
சந்திர
தூப போளம் வைத்து சுதனைப் பணிந்தாரே
விந்தையது
பார்க்கலாம் வா ஓடி - பெத்தலேகேம்
Comments
Post a Comment