15 May 2018

பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித்துதி, மனமே - இன்னும்


கி.கீ.33                           

17.         சரசாங்கி                    திஸ்ர ஏகதாளம்

பல்லவி

                   பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித்துதி, மனமே - இன்னும்


சரணங்கள்

1.         முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக - இங்கு
            மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே                    - பெத்தலையில்

2.         சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் - இங்கே
            பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார்                           - பெத்தலையில்

3.         சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் - இங்கே
            தாழ்மையுள்ள தாய்மடியில் தலைசாய்க்கலானார்.                      - பெத்தலையில்

4.         ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங்கொண்டோர் - இங்கே
            ஆக்களுடை சத்தத்துக்குள் அழுது பிறந்தார்                         - பெத்தலையில்

5.         இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை - நாம்
            எண்ணமுடன் போய் துதிக்க ஏகிடுவோமே                                - பெத்தலையில்

- யோ. பால்மர்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...