15 May 2018

ஜீவநாயகரிதோ சிசுவாகப் பிறந்தார்


18.         இராகம் (பாவநாசகரேக பாடுபட்டு)

பல்லவி

          ஜீவநாயகரிதோ சிசுவாகப் பிறந்தார்
          ஜெயமங்களம் பாடி துதிகொண்டாடுவோம் - ஜீவ

1.         மாசில்லா மெஞ்ஞான மாசிரோமணியை
            மனமகிழ்ச்சியாக மகிழ்ந்து போற்றுவோம்
            மங்களப்பதம்பாடி மகிழ் கொண்டாடுவோம்

2.         அதிசயமான ஏசு ரட்சகரை
            ஆவியினால் கண்டு அறிந்துகொள்ளுவோம்
            ஆகா இதுவும் இதுவும் மெத்த அதிசயந்தானே            - ஜீவ

3.         மாட்டுக்கொட்டிலில் தேவ ஆட்டுக்குட்டியார்
            எமை மீட்டு ரட்சித்திட தேட்டம் கொண்டாரே
            ஆகா மெத்த அதிசயம்தானே                                       - ஜீவ

4.         தேவன் மனுஷனான சிறப்பைக்கண்டிட
            சிறந்த பெத்லேம் நகர் பறந்து போய் வருவோம்
            ஆகா மெத்த மெத்த ஆச்சரியமே                                 - ஜீவ

5.         இன்று பெத்லகேமில் உதித்த ஏசுவை
            இன்று நெஞ்சில் ஏற்றுக்கொள்வீர் நேசரே
            ஆகா இதுதான் மெத்த ஆசீர்வாதமே                          - ஜீவ

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...