நமக்கொரு பாலகனார் பிறந்திருப்பதை பாரும்
32. இராகம் (இந்தக் குழந்தையை நீர்)
பல்லவி
நமக்கொரு
பாலகனார் பிறந்திருப்பதை பாரும்
அனுபல்லவி
கர்த்தத்துவத்தையுமே தோளில் அணிந்தவராய்
1. அதிசயமானவராய் அந்த லோகத்தை விட்டு
ஆதி வாக்குப்படியே அன்னை மரியாளிடம் - நமக்கொரு
2. ஆலோசனைக் கர்த்தாவாய் அந்த லோகத்தை விட்டு
பூலோகத்தினிடத்தில் புனித மரியாளிடம் - நமக்கொரு
3. வல்லமையுள்ள தேவன் வயங்கி மண்டலம் விட்டு
புல்லணை மீதினிலே புனித மரியாளிடம் - நமக்கொரு
4. நித்திய பிதாவென்றும் நிறைந்த நீதியணிந்த
சத்திய வாசகராய் சங்கை மரியாளிடம் - நமக்கொரு
5. சமாதானப் பிரபுவாய் சங்கை மிகுந்த தேவன்
சார்ந்த இப்பூவுலகில் தாயார் மரியாளிடம் - நமக்கொரு
6. நீதிமான்களை யல்ல நீசப் பாவிகளைத்தான்
புதிதாய் சிருஷ்டிப்பதற்கு புனித மரியாளிடம் - நமக்கொரு
7. பங்கப்படும் பாவியைப் பாதுகாக்கும் அந்த
சங்கை மிகுந்த தேவன் சாந்த மரியாளிடம் - நமக்கொரு
8. தேவ தன்மையுடனே மனுஷ தன்மையும் கூடி
ஜீவ தண்ணீர் சுரக்க சிறந்த மரியாளிடம்
- நமக்கொரு
Comments
Post a Comment